Wednesday, June 29, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த சோலைகணேசன், வரதட்சணைக்காக மூன்றாவது திருமணம் செய்ய முயன்றபோது...

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த சோலைகணேசன், வரதட்சணைக்காக மூன்றாவது திருமணம் செய்ய முயன்றபோது சிக்கியிருக்கிறார். | The man who attempted the third marriage was sentenced to 37 years in prison

இதையடுத்து சிங்கப்பூரிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்த ஆரோக்கியமேரி, 2018-ம் ஆண்டு புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். அதன்பேரில், விசாரணை செய்த போலீஸார் சோலைகணேசன், அவர் தாய் ராஜம்மாள், தங்கை கமலஜோதி, தம்பி முருகேசன், சித்தப்பா நாரயணசாமி ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்து சோலைகணேசனைக் கைதுசெய்தனர்.

இந்த வழக்கு கடந்த நான்கு வருடங்களாக புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா நேற்றைய தினம் அதிரடி தீர்ப்பளித்தார். அதில், சோலைகணேசனுக்கு 7 பிரிவுகளின் கீழ் 37 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2.6 லட்சம் அபராதமும் விதித்தார்.

மகிளா நீதிமன்றம்

மகிளா நீதிமன்றம்

அபராதத்தைக் கட்டத் தவறினால், கூடுதலாக ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதேபோல சோலைகணேசனின் தாய் ராஜம்மாளுக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக 5 பிரிவுகளின் கீழ் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.9 லட்சம் அபராதமும் விதித்தார்.

சோலைகணேசனின் சகோதரி கமலஜோதிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், சித்தப்பா நாராயணசாமிக்கு ஐந்து பிரிவுகளின் கீழ் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.9 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தம்பி முருகேசனுக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.6 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சோலைகணேசனையும், அவர் குடும்பத்தினரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments