Tuesday, July 5, 2022
Homeஅரசியல் செய்திகள்முதுகலை படிப்புக்கும்வருகிறது கியூட் தேர்வு| Dinamalar

முதுகலை படிப்புக்கும்வருகிறது கியூட் தேர்வு| Dinamalar

புதுடில்லி-‘நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புக்கு, நடப்பு கல்வியாண்டு முதல், ‘கியூட்’ நுழைவுத் தேர்வு வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்’ என யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.நாடு முழுதும் உள்ள 45 மத்திய பல்கலைக் கழகங்களில் நடப்பு கல்வியாண்டு முதல் இளங்கலை பட்டப் படிப்பில் சேர, ‘கியூட்’ எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கானஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, ஏப்., 6ல் துவங்கியது. மே, 6ல் பதிவு முடிய இருந்த நிலையில், அவகாசம், 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி அவகாசம் நாளை மறுநாள் முடிகிறது. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலையுடன் சேர்த்து, திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் பல்கலையிலும், கியூட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பல்கலைகளில் முதுகலை பட்டப்படிப்பில் சேரவும், நடப்பு கல்வியாண்டு முதல் கியூட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக யு.ஜி.சி., நேற்று அறிவித்தது. இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கி, அடுத்த மாதம் 18 வரை நடக்கிறது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments