Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்முன்கூட்டியே மேட்டூர் அணை திறப்பு; சாதகமா, பாதகமா?|Advance Mettur dam opening; pros and cons

முன்கூட்டியே மேட்டூர் அணை திறப்பு; சாதகமா, பாதகமா?|Advance Mettur dam opening; pros and cons

தஞ்சை மாவட்டம் ராயமுண்டாப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதி ஜீவக்குமார் ”முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்படுவது டெல்டா விவசாயிகளை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. குறுவை சாகுபடிக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையோடு மும்முரமாக ஈடுபடுவார்கள். ஆனால் அதேசமயம் தூர் வாரும் பணி முழுமையாக நடைபெற்று முடிவதற்குள் தண்ணீர் திறக்கப்படுவது, ஊழலுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஜீவக்குமார்

ஜீவக்குமார்

தமிழக அரசு இந்த குற்றச்சாட்டை தவிர்க்க, முன்கூட்டியே மழை நிலவரத்தை அறிவியல் பூர்வமாக அறிந்து கொண்டும், மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை மனதில் கொண்டும், மிகவும் சீக்கிரமாக மேட்டூர் அணையை திறக்க வேண்டியதிருக்கும் என்பதை முன் கணிப்பு செய்திருக்க வேண்டும்.

அதற்கேற்ப தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இதனை செய்ய தவறிவிட்டார்கள். குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள், விதை இவற்றை தயார் நிலையில் வைப்பதோடு, வங்கிகளில் பயிர் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். கடந்த குறுவை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்ய முடியாத நிலைக்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments