Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்மு.க.ஸ்டாலின் எனும் பெயரை மாற்ற அரசு குழு அமைக்க வேண்டும் - நக்கல் அடிக்கும் அண்ணாமலை!...

மு.க.ஸ்டாலின் எனும் பெயரை மாற்ற அரசு குழு அமைக்க வேண்டும் – நக்கல் அடிக்கும் அண்ணாமலை! | Government Should Set Up a Committee To Change The Name of MK Stalin Annamalai

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழி என்று கடந்த மாதம் பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாகவும் கண்டிக்கும் விதமாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் அணங்கின் படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது.  

அகோரமான ஒரு படத்தை பதிவு செய்து அதைதான் தமிழ் அணங்கு என்று சொல்வதா என வலதுசாரியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அதே சமயம் தமிழர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதை நீங்கள்தான் அகோரமாக பார்க்கிறீர்கள் என்று ஒரு தரப்பும் குரல் கொடுத்தனர். இந்த விவகாரம் கொஞ்சம் ஓய்ந்திருந்த நிலையில் நேற்று முதல்வர் போட்ட ஒரு டிவீட் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளானது. 

தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம்பிள்ளைக்கு இத்தாலியில் உள்ள வாடிகன் தேவாலயத்தில் நேற்று போப் பிரான்சிஸ் புனிதர் பட்டத்தை வழங்கினார். புனிதராக அறிவிக்கப்பட்டதால் வாடிகனில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ‘இத்தாலியில் ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து’ என இந்த காட்சிகளை ட்விட்டரில் பதிவிட்டார். இதனை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே என்று தமிழ் அணங்கின் படத்தை பதிவு செய்திருந்தார்.

Stalin

மேலும் படிக்க | தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக செய்த மாணவர் – குவியும் பாராட்டு

அடுத்த சில நிமிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்ட அதே வார்த்தைகளுடன் தமிழ் தாய் என குறிப்பிடப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துக்களுக்கு இடையே வட மொழி எழுத்தான ‘ஸ’ இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

annamalai

இதைக்குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்ட தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ”தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன்   ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்” என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்” என கருத்து தெரிவித்தார். 

Thangam Thennarasu

இந்த நிலையில், “தமிழ் தமிழ்” என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 

thamil thai

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள “ஸ” என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். “தமிழ் தமிழ்” என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது!. “ஸ”வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்! 

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ரஹ்மானின் ” தமிழணங்கு” தமிழ்ப்பற்றா? அரசியலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments