மூலிகை ரகசியத்துக்காக கடத்தப்பட்ட வைத்தியர் கொடூரக் கொலை -`பொய் புகார்’ தொழிலதிபர் சிக்கியது எப்படி? | Mysore sidha doctor killed by a businessman, now arrested

பாரம்பர்ய வைத்தியரை கொலை செய்த வழக்கில் தொழில் அதிபர் ஷைபின், நெளஷாத், அஷ்ரப், ஷிகாபுதீன் ஆகிய நான்குபேரை போலீஸார் கைது செய்துளனர். இதுபற்றி மலப்புரம் எஸ்.பி சுஜித் தாஸ் கூறுகையில், “மலப்புறம் நிலம்பூர் முக்கட்டா பகுதியைச் சேர்ந்த ஷைபின் என்பவர் அவரது வீட்டில் இருந்து பணம், லேப்டாப், மொபைல் ஆகியவற்றை அடையாளம் தெரியாத சிலர் திருடிச்சென்றதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி சுல்தான் பத்தேரி பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் என்பவரை கைது செய்தோம். மற்றவர்களை கைதுசெய்ய முடியவில்லை. அவர்கள் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தியதுடன், பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றனர்.

அவர்களை கண்டோமெண்ட் போலீஸார் பிடித்து நிலம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில் நெளஷாத் என்பவரிடம் நடத்திய விசாரணையில், மைசூரைச் சேர்ந்த ஷாபா ஷெரீப் என்ற நாட்டு வைத்தியரை கடத்திக்கொண்டுவந்து நிலம்பூரில் உள்ள ஷைபின் வீட்டில் வைத்து கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக தெரிவித்தார். ஏற்கனவே ஷைபினுடன் இணைந்து நெளஷாத் உள்ளிட்டவர்கள் பல குற்றங்களை செய்துள்ளனர்.

மலப்புறம் எஸ்.பி சுஜித் தாஸ்

மலப்புறம் எஸ்.பி சுஜித் தாஸ்

இதையடுத்து மைசூருக்குச் சென்று, ஷாபா செரீப் உயிருடன் இருக்கிறாரா என விசாரித்தோம். 2019 ஆகஸ்ட் 2-ம் தேதி அவரை காணவில்லை என புகார் பதிவுச்செய்யப்பட்டது தெரியவந்தது. எங்களிடம் இருந்த வீடியோவை காட்டி அந்த வைத்தியர் இவர்தானா என விசாரித்தோம். குடும்பத்தினர் அவர்தான் என அடையாளம் காட்டினர். கடத்தப்பட்டது மைசூர் வைத்தியர் என்பது தெரியவந்தது. ஷைபின் அஷ்ரப் வீட்டில் வைத்து 2020 அக்டோபர் மாதம் வரை அவரை கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஒருகட்டத்தில் வைத்தியரின் மார்பில் மிதித்தபோது அவர் சுருண்டுவிழுந்து இறந்துள்ளார். அவரின் உடலை சிறு துண்டுகளாக வெட்டி ஆற்றில் போட்டுள்ளனர். நெளஷாத், ஷிகாபுதீன், ஷைபின் அஷ்ரப் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறோம். இன்னும் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியது உள்ளது” என்றார்.

மூல நோயை குணப்படுத்தும் மூலிகை ரகசியத்துக்காக நாட்டுவைத்தியரை கடத்தி கொலை செய்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

Your email address will not be published.