Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்மெட்ரோ பணிகளுக்காக இடம் மாறுகிறதா மெரினா காந்தி சிலை?! | Metro work: Gandhi statue...

மெட்ரோ பணிகளுக்காக இடம் மாறுகிறதா மெரினா காந்தி சிலை?! | Metro work: Gandhi statue to be moved from marina

சென்னை மெரினா கடற்கரையில் 60 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காந்தி சிலை இருக்கிறது. 1959-ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு, தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் முன்னிலையில், 12 அடி காந்தி சிலை கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.

மெரினா காந்தி சிலை

மெரினா காந்தி சிலை

இந்த நிலையில், புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக, இந்த காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, சென்னை பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் இடையே சுரங்க மெட்ரோ ரயில்பாதைப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதில், கலங்கரை விளக்கத்துக்கான மெட்ரோ ரயில்நிலையம் மற்றும் சுரங்கப்பாதையானது, மெரினா காந்தி சிலை இருக்கும் பகுதியின் அடியில், சுரங்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகளின்போது காந்தி சிலை சேதமடைந்துவிடக்கூடாது என்பதற்காக, அதை பாதுகாப்பான முறையில் இடமாற்றம் செய்ய, அரசு அதிகாரிகள், மெட்ரோ கட்டுமானப் பொறியாளர்கள் கலந்தாலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர், “மெட்ரோ பணிகளின்போது, காந்தி சிலை சேதமடைவதைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலையை மாற்று இடத்தில் வைக்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான சிறந்த தேர்வாக, சென்னை மாநகராட்சியின் வரலாற்று சிறப்பு மிக்க ரிப்பன் மாளிகை வளாகத்தின் நுழைவாயிலில் காந்தி சிலையை மாற்றி வைக்க ஏற்பாடு செய்திருகிறோம். மெட்ரோ பணிகள் முடிவடைந்த பிறகு, மீண்டும் காந்தி சிலை மெரினா கடற்கரையிலேயே நிறுவப்படும்! இதுகுறித்த அரசாங்க அறிவிப்பு விரைவில் வெளிவரும்” எனத் தெரிவித்தார்.

சுமார் 60 ஆண்டுகள் பழைமையான காந்தி சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments