சிறப்பு : திருவேதிக்குடிக்கு வந்தால் திருமண யோகம் கைகூடும் என்பது முதுமொழி. ஈசன் வாழை மடுவில் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால், வாழை மடுநாதர் என்ற திருநாமமும் கொண்டுள்ளார்.
கல்யாண வரம் அருளும் தென் சிதம்பரம்!
இறைவன் – ஸ்ரீதாண்டவேஸ்வரர்
அம்பாள் – ஸ்ரீபிரகன்நாயகி
சிறப்பு: இங்கு வந்து, ஈசனையும் அம்பிகையையும் வேண்டிக்கொண்டால் விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பது நம்பிக்கை. காலையில் விரதமிருந்து, மாலை சாத்தி, களி நைவேத்தியம் செய்து மனதார வழிபட்டால் நிறைவான வாழ்வு கிடைக்கும் என்கிறார்கள்.
காரமடையில் புத்தாடை வேண்டுதல்!
இறைவன் – ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர்
அம்பாள் – ஸ்ரீலோகநாயகி அம்மை
சிறப்பு: மைசூரில் உள்ள பிரசித்த பெற்ற நஞ்சன்கூடு தலத்தை மாதிரியாகக்கொண்டு, இந்தக் கோயிலை அமைத்தார்களாம். கணவன் – மனைவி ஒற்றுமைக்கு இத்தல ஈசனும் அம்பிகையுமே உதாரணமாக இருப்பதால் இத்தலம் திருமண வரம் அருளும் ஆலயமாக விளங்குகிறது.
மெலட்டூர் திருத்தலத்தில் அருள்கிறார் ஶ்ரீஸித்திபுத்தி சமேத ஶ்ரீதட்சிணாமூர்த்தி விநாயகர்.
இந்த விநாயகப்பெருமானுக்கு வெள்ளெருக்கம் பூவைப் பாலில் போட்டு குளிர்ந்த அம்மலர்களை சாத்தி வழிபட்டால் திருமண பாக்கியத்தை உடனே கிடைக்கும் என்கின்றனர் இவ்வூர் மக்கள்.
அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர்
இறைவன் – ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரர்
அம்பாள்- ஸ்ரீபாலமீனாம்பிகை
சிறப்பு: சுந்தரேஸ்வரர் – மீனாட்சியம்மை திருமணம் முடிந்து திருக்கயிலாயத்துக்குச் செல்லும் வழியில் மீனாட்சி அம்மை தன் தோழிகளுக்காக, திருமணக் கோலம் காட்டி அருளிய தலம் இது. எனவே இங்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமண வரம் கிட்டும் என்பது நம்பிக்கை.