Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்யாரை கேட்டு பொறுப்பேற்றாய்| Dinamalar

யாரை கேட்டு பொறுப்பேற்றாய்| Dinamalar

சிக்கமகளூரு:போலீஸ் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டரை பா.ஜ., – எம்.எல்.ஏ., எம்.பி.குமாரசாமி திட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சிக்கமகளூரின் மூடிகரே அருகே உள்ள மல்லந்துார் போலீஸ் நிலையத்தில் ரவீஸ் என்பவர், சமீபத்தில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவரை மூடிகரே பா.ஜ., – எம்.எல்.ஏ., குமாரசாமி திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதில், யாரை கேட்டு பொறுப்பேற்றாய். நீ இங்கே வர கூடாது என நான் சொன்னேன் அல்லவா; மீண்டும் ஏன் இங்கே வந்தாய். யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்து இங்கே வந்தாய். நான் சொன்னபடி கேள்; உடனடியாக திரும்பி சென்று விடு; ஐ.ஜி.,க்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தாய்; யார் அந்த ஐ.ஜி; மூடிகரேயில் ஐ.ஜி., எல்லாம் நானே; என்னை பார்க்க வந்தால் உதைத்து அனுப்புவேன்’ என, கூறி உள்ளார்.
இந்த ஆடியோ குறித்து குமாரசாமி கூறுகையில், ”நான் இன்ஸ்பெக்டரை திட்டியது நிஜம். அவர் புதியதாக பதவி ஏற்கும்போது மரியாதைக்கு கூட எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை; சந்திக்கவில்லை. தொகுதியின் நிலவரங்கள் எனக்கு தெரிய வேண்டாமா. அவர் ஐ.ஜி., முதற்கொண்டு எல்லோருக்கும் லஞ்சம் கொடுத்து வந்துள்ளார். நான் பேசியதை ரிக்கார்டு செய்துள்ளார். நான் பேசியதை மறுக்கவில்லை,” என்றார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments