Sunday, July 3, 2022
Homeசினிமா செய்திகள்ரன்பீர் கபூர் ஆலியா பட் திருமணம்: 28 பேர் மட்டுமே பங்கேற்பு; மின் விளக்குகளால் ஒளிரும்...

ரன்பீர் கபூர் ஆலியா பட் திருமணம்: 28 பேர் மட்டுமே பங்கேற்பு; மின் விளக்குகளால் ஒளிரும் ரன்பீர் வீடு! |Actor Ranbir Kapoor – Alia Bhatt’s wedding has been postponed to another date as planned.

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டிற்கு திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. திருமணத்தேதி தொடர்பாக மாறுபட்ட செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. திருமணம் நடக்கப்போவது நிச்சயம் என்பதை உறுதிபடுத்திய இருவரது குடும்பமும் திருமண தேதியை மட்டும் உறுதியாகச் சொல்லவில்லை. ஆரம்பத்தில் இம்மாதம் 17-ம் தேதி என்று செய்தி வெளியானது. பின்னர் 14, 15, 16 என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியாக வந்து கொண்டே இருந்தது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமண தேதி குறித்த செய்தி வெளியில் கசிந்ததால் இப்போது மீண்டும் திருமண தேதியை மாற்றி அமைத்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு திருமண தேதி மாற்றப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. முன்பு அலியாவின் சித்தப்பா ராபின் பட் ஏப்ரல் 14ம் தேதி திருமணம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

ஆலியா பட்-ரன்பீர் கபூர்

ஆலியா பட்-ரன்பீர் கபூர்

ஆனால் இப்போது ஆலியாவின் சகோதரர் ராகுல் தனியார் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ரன்பீர்-ஆலியா தம்பதி திருமண தேதியை மாற்றியுள்ளனர். முதலில் 14ம் தேதி என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பான செய்தி வெளியில் கசிந்ததாலும், பாதுகாப்பு காரணங்களாலும் திருமண தேதி வேறு ஒருநாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருமணம் 13, 14ம் தேதிகளில் நடக்காது. இதுதான் உண்மை. ஆனால் உண்மையில் இத்தேதியில் தான் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் நெருக்கடி காரணமாக திருமண தேதி உட்பட அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. அதிகமாக 20-ம் தேதி திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments