ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம்: ஆர்.கே பங்களாவில் விழா; ஒரு நடிகருக்கு மட்டும் அழைப்பில்லை! |Actor Ranbir Kapoor-Alia Bhatt wedding ceremony starts on the 14th

கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வரும் பாலிவுட் நட்சத்திரங்கள் அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இம்மாதம் 17-ம் தேதி திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். நடிகை கத்ரீனா கைஃப் போன்று ரன்பீர் கபூரும் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் செம்பூரில் உள்ள ஆர்.கே.பங்களாவில் திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. குடும்பத்தில் எது நடந்தாலும், அவர்களின் பூர்வீக குடும்ப வீடான ஆர்.கே.பங்களாவில் நடப்பது வழக்கம். கபூர் குடும்பத்தின் இந்த தலைமுறையின் கடைசி திருமணமாக ரன்பீர் கபூர் திருமணத்தை அவரின் குடும்பத்தினர் பார்க்கின்றனர். எனவே இதனை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளனர். கபூர் குடும்பத்தில் உள்ள அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ரன்பீர் கபூர் குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பஞ்சாப் முறைப்படி நடக்க இருக்கும் இத்திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

 ரன்பீர், ஆலியா

ரன்பீர், ஆலியா

கபூர் குடும்பத்திற்கு 8 மிகவும் ராசியான நம்பர் என்பதால் அவர்கள் திருமண நாளை 17ம் தேதியாக முடிவு செய்திருப்பதாகக் கபூர் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. இத்திருமண சடங்குகள் வரும் 14-ம் தேதி தொடங்க இருக்கிறது. 4 நாட்கள் நடக்கும் இத்திருமண சடங்குகள் 17-ம் தேதி திருமணத்தோடு முடிவடையும். 16-ம் தேதி அதிகாலையில் திருமணம் நடக்க இருப்பதாகவும் மற்றொரு தகவல் கிடைத்திருக்கிறது. திருமணம் குறித்து ரன்பீர் குடும்பத்தினர் முறைப்படி அறிவிக்காமல் இருப்பதால் திருமண தேதி குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகிறது.இத்திருமணத்திற்கு வழக்கம் போல் சல்மான் கான் அழைக்கப்படவில்லை. அதோடு சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரின் முன்னாள் காதலியான கத்ரீனா கைஃப்பும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை. கத்ரீனாவுடன் ரன்பீர் 7 ஆண்டுகள் காதலில் இருந்தார். அதன் பிறகு அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு இப்போது கத்ரீனா கைஃப் நடிகர் விக்கியை காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார்.

Source link

Leave a Comment

Your email address will not be published.