புதுடில்லி : ”வன்முறை களமாக மாறியிருக்கும் ஜோத்பூருக்கு, காங்., – எம்.பி., ராகுல், நேபாளத்தில் இருந்து கிளம்பிச் சென்று பார்வையிட வேண்டும்,” என, பா.ஜ., கூறியுள்ளது.
நேற்று டில்லியில், பா.ஜ., தேசிய பொதுச் செயலரும், ராஜஸ்தான் மாநில பா.ஜ., மேலிடப் பொறுப்பாளருமான அருண்சிங் கூறியதாவது: ராகுல் சமீபத்தில் ராஜஸ்தானுக்கு வந்திருந்தபோது, ஹிந்துத்துவா மற்றும் ஹிந்துத்துவவாதி பற்றி விளக்கம் தந்திருந்தார். இப்போது அவரும், அவரது சகோதரி பிரியங்காவும் ஜோத்பூருக்கு செல்ல வேண்டும். அங்கு நடக்கும் வன்முறைகளை இருவரும் பார்க்க வேண்டும். அப்போதுதான், உண்மை நிலை தெரியும். குறிப்பிட்ட வகுப்பினரை மட்டும் மகிழ்ச்சிப்படுத்தும் வேலையில் ஈடுபட வேண்டாம் என்று ராஜஸ்தான் முதல்வரை அவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். இதற்காக நேபாளத்தில் உள்ள ராகுல், விரைவில் ஊர் திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி : ”வன்முறை களமாக மாறியிருக்கும் ஜோத்பூருக்கு, காங்., – எம்.பி., ராகுல், நேபாளத்தில் இருந்து கிளம்பிச் சென்று பார்வையிட வேண்டும்,” என, பா.ஜ., கூறியுள்ளது.நேற்று டில்லியில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.