Saturday, June 18, 2022
Homeஅரசியல் செய்திகள்``ராஜபக்சே குடும்பம் இந்தியாவில் தஞ்சமடைந்ததா?” - இந்திய தூதரகம் சொல்வதென்ன? |Indian Embassy In Sri...

“ராஜபக்சே குடும்பம் இந்தியாவில் தஞ்சமடைந்ததா?” – இந்திய தூதரகம் சொல்வதென்ன? |Indian Embassy In Sri Lanka Denies fake Reports Of Nation’s Politicians Fleeing To India

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக , அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொழும்பில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தில் ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதால், பல இடங்களில் கலவரம் பெரிய அளவில் உருவானது. இதையடுத்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்தியத் தூதரகம், தனது ட்விட்டர் பதிவில், “குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை உயர் ஸ்தானிகராலயம் அவதானித்துள்ளது

இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகளாக உள்ளதுடன் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை. இவ்வாறான செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கின்றது.” என கூறியுள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments