`ராஜா ராணி 2’வில் ஆல்யாவுக்கு பதிலாகக் களமிறங்கும் ரியா… யார் இவர்? என்ன காரணம்? | Alya Manasa quits Raja Rani 2 serial for temporary reasons

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் ‘ராஜா ராணி 2’. இந்தத் தொடரின் மூலம் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார் ஆல்யா. தற்போது, அவர் கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் இந்தத் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகியிருக்கிறார். இதனால், ஆல்யாவுக்குப் பதிலாக ரியா விஸ்வநாதன் என்பவர் இந்தத் தொடரில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சரி, யார் இந்த ரியா?

சீரியல் உலகிற்கு புது வரவு. சென்னையைச் சேர்ந்த மாடலான இவர் இந்தத் தொடரின் மூலம் சீரியலுக்குள் என்ட்ரியாக இருக்கிறார். ‘பாக்கியலட்சுமி’ தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷாலின் நண்பர் இந்த ரியா என்பது கூடுதல் தகவல்.

ஆல்யா - ரியா

ஆல்யா – ரியா

ஆல்யா மானசா சீரியலில் இருந்து விலகினாலும், இது தற்காலிகம்தான், கண்டிப்பாக அவர் மீண்டும் தொடரில் இணைவார் என்கிறார்கள். அவர் வரும் வரையில் அவருக்கு பதிலாக ரியா இனி சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பார்.

கதைக்களம் போலீஸ் கதாபாத்திரத்தைக் கொண்டுள்ளதால் அந்தக் கேரக்டருக்கு ரியா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரைத் தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தொடரின் மூலமாக மாடலான ரியா நடிகையாகத் தொடர்ந்து பல தொடர்களில் நாயகியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.