ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்

ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்

14 மே, 2022 – 11:01 IST

எழுத்தின் அளவு:


Prakashraj-may-selected-as-Rajyasabha-MP

ஐதராபாத் : பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் (57) தெலுங்கானாவில் இருந்து ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ். வில்லன், ஹீரோ, இயக்கம், தயாரிப்பு என பன்முகம் காட்டி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் சார்ந்த கருத்துக்களை முன் வைத்து வருகிறார். குறிப்பாக மத்திய அரசை அதிகம் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழு ராஜ்யசபா எம்.பி., பதவிகளும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்யும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வசமே உள்ளன.

ராஜ்ய சபாவில் எம்.பி.,க்களாக இருக்கும் வோடிடெலா லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி நிவாஸ் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 21ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. காலியாகும் இந்த இரண்டு எம்.பி., பதவிக்கான தேர்தல் ஜூன் 10ல் நடக்கிறது. இந்தச்சூழலில் நடிகர் பிரகாஷ் ராஜ், சமீபத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, பிரகாஷ் ராஜுக்கு ராஜ்யசபா ‘சீட்’ வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகிஉள்ளது.Source link

Leave a Comment

Your email address will not be published.