Thursday, June 23, 2022
Homeஅரசியல் செய்திகள்ரூ.1.37 கோடி மோசடிதபால் ஊழியர் தற்கொலை| Dinamalar

ரூ.1.37 கோடி மோசடிதபால் ஊழியர் தற்கொலை| Dinamalar

யாத்கிர்-தபால் துறையில் 293 பேர் என போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, அரசின் நலத்திட்டத்தின் கீழ், 1.37 கோடி ரூபாயை மோசடி செய்த தபால் துறை ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

அவருக்கு உடந்தையாக இருந்த மூவர் தலைமறைவாகி விட்டனர்.யாத்கிர் தபால் நிலையத்தில் சமீபத்தில் கணக்கு தணிக்கை நடத்தப்பட்டது. பாலபட்டி கிளை தபால் நிலையத்திற்கு உட்பட்ட 60 – 70 கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேர், கணக்கு வைத்துள்ளனர். இதில், 293 பேரின் கணக்கு போலி என்பதையும், 1.37 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதையும் கண்டுபிடித்தனர்.இது தொடர்பாக, கோகி போலீஸ் நிலையத்தில், தபால் உதவியாளர் திரிஷுல், 35, தபால் இன்ஸ்பெக்டர் சர்தார் நாயக், 32, ஆகியோர் மீது ஜூன் 11ல் புகார் அளிக்கப்பட்டது. இதையறிந்த திரிஷுல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சர்தார் நாயக் தலைமறைவானார்.விசாரணையில், ‘சந்தியா சுரக் ஷா’ திட்டம், விதவைகள் பென்ஷன் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு பயனாளிகள் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை எடுக்காமல் இருந்தது. இவர்களுக்கு மொபைல் போன் எண் இல்லாததால், இதை அபகரிக்க திரிஷுல், சர்தார் நாயக் திட்டமிட்டனர்.இதையடுத்து, அதே கிளையில், தங்கள் நண்பர்களின் படம், அடையாள அட்டைகளை பயன்படுத்தி, 293 போலி கணக்குகளை திறந்தனர். இதற்காக, பல சிம் கார்டுகளை வாங்கி, ஆவணங்களுடன் இணைத்து, ஓராண்டாக, 1.37 கோடி ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது.அடையாள அட்டை, ஆவணங்கள் கொடுத்தவர்களுக்கு, இவர்கள் மோசடி செய்தது தெரியாது.இந்த மோசடியில் சர்தார் நாயக் உறவினர்கள் குருராஜ், நீலேசுக்கும் தொடர்பு உள்ளது. அவர்களும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments