அதன் ஒரு பகுதியாக ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான, 6வது கட்ட பேச்சுவார்த்தை சீனப்பகுதியில் உள்ள மால்டோ எனும் இடத்தில் நடைபெற்றது. இந்திய ராணுவ துணைத்தலைமை தளபதி ஹரீந்தர் சிங், சீன ராணுவ மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
45 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக இருநாடுகளும் குற்றம்சாட்டிய நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சகத்தில் கிழக்காசிய விவகாரங்களை கவனிக்கும் இணைச் செயலாளர் நவின் ஸ்ரீவத்சவா முதல்முறையாக கலந்து கொண்டார்.
ராணுவத் தலைமை அலுவலகத்தில் இருந்து மூத்த அதிகாரி ஒருவரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையின் போது சீனா தனது படைகளை திரும்பப்பெற்று கடந்த ஏப்ரல் மாதம் உள்ள நிலைக்கு திரும்ப வலியுறுத்தியதாக தெரிகிறது.
மேலும் படிக்க…விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் விமர்சனங்களை சந்திக்கிறது ஐ.நா சபை, பன்முகத்தன்மை வேண்டும்’ – பிரதமர் மோடி
இருநாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, தற்போது நடைபெற்றுள்ள கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சு பதற்றத்தை சற்றே தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.