இதையடுத்து, இந்திய விமானப் படையின் சுகோய்-30எம்கேஐ, மிராஜ் 2000, ஜாக்குவார் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு நேரத்திலும் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன. லடாக்கின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், அமெரிக்க அபாச்சே வகை ஹெலிகாப்டர்கள் மிக அருகிலேயே தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
படை வீரர்களை விரைந்து அழைத்துச் செல்வதற்காக லே விமானப்படை தளத்தைச் சுற்றி சினூக் ரக ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல, படை வீரர்களை அழைத்துச் செல்லவும், பொருட்களை கொண்டுசெல்லவும் முக்கியப் பங்கு வகிக்கும் வகையில், எம்ஐ-17வி5 நடுத்தர ரக ஹெலிகாப்டர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
சீன விமானப்படையினர் ஹோட்டன், கர் குன்சா பகுதிகளிலிருந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ள நிலையில், லடாக் மற்றும் திபெத் பிராந்தியத்தை சுற்றியுள்ள லே, ஸ்ரீநகர், அவந்திபூர், பரேலி, ஆதம்பூர், ஹல்வாரா, அம்பாலா, சிர்சா என பல்வேறு தளங்களிலிருந்து இந்திய விமானப்படையால் பதிலடி கொடுக்க முடியும். எனவே, இந்திய விமானப்படைக்கு சிறப்பான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.