சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டு எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கும் ஐந்து அம்ச கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.
இதில் பிரச்னைக்குரிய லடாக் எல்லையில் அமைதியை நிலைநாட்ட இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய எந்தவொரு செயலையும் தவிர்க்கவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க…பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திலும் முறைகேடு – புதுக்கோட்டை மக்கள் வேதனை
இந்திய – சீனா எல்லை விவகாரங்கள் குறித்து அனைத்து நெறிமுறைகள் மற்றும் ஒப்பந்தங்களை நிலைத்திருக்க செய்யவும் அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.