Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்``வக்பு வாரிய சொத்துகளை நான் அபகரித்தேனா!" -தன் மீதான குற்றச்சாட்டு குறித்து செஞ்சி மஸ்தான் விளக்கம்

“வக்பு வாரிய சொத்துகளை நான் அபகரித்தேனா!" -தன் மீதான குற்றச்சாட்டு குறித்து செஞ்சி மஸ்தான் விளக்கம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் இருப்பவர் செஞ்சி மஸ்தான். இவர், செஞ்சி பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம், பெரியகரம், சக்கராபுரம், பெரியகாஞ்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வக்பு வாரிய சொத்துகள் சிலவற்றை… தன் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளதாகக் கூறி, சர்வே எண் கொண்ட விவரங்களுடன் தலைமைச் செயலர் இறையன்புவிடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார் முன்னாள் வக்பு வாரியத் தலைவர் ஹைதர் அலி. இந்தச் சம்பவம், நேற்றைய தினம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வக்பு வாரியம்

இந்த நிலையில், நேற்று (03.05.2022) மாலை செஞ்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செஞ்சி மஸ்தான், சொத்து அபகரிப்பு குறித்த புகாருக்கு விளக்கமளித்த பின்னர், “என்னிடம் என்ன சொத்து இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். அதை நான் சட்டமன்றத் தேர்தலின் போதுகூட பதிவு செய்திருக்கிறேன். தேர்தலுக்கு முன்பும், பின்பும் எனது சொத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்… அதை நான் விற்றிருப்பேனே தவிர, எந்த சொத்தையும் வாங்கவில்லை.

என் மீது தவறாக பேட்டி கொடுப்பவர் முன்னாள் வக்பு வாரியத் தலைவர் ஹைதர் அலி. இன்றைய காலகட்டத்தில் அவருடைய அரசியல் கட்சியில் செல்லுபடியாகாத காரணத்தினாலும், தன்னால் எந்த பதவிக்கும் வர முடியவில்லையே என்பதாலும், என்னுடைய வளர்ச்சியை பிடிக்காமல் காழ்ப்புணர்ச்சியில் இவ்வாறு அவதூராக சொல்லியிருக்கிறார். நான் அவ்வாறு சொத்துகளை அபகரிப்பவனாக இருந்திருந்தால், இந்தப் பகுதியில் வாழும் மக்கள், 1986-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக என்னை எப்படி ஆதரித்து வெற்றி பெற செய்திருப்பார்கள்? இந்தக் குற்றச்சாட்டு, அரசியல் ரீதியாக ஒரு காழ்ப்புணர்ச்சியை உருவாக்க வேண்டுமென்று செய்யப்பட்டுள்ளது.

ஹைதர் அலி, அமைச்சர் மஸ்தான்

தொடர்ந்து இவர்கள் இது போன்ற பேட்டியை கொடுப்பதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், சட்டரீதியாக அவர்களை சந்திக்க நான் தயாராக இருப்பேன். என்னை பொறுத்த வரைக்கும், ‘மடியில் கனமில்லை… அதனால், வழியில் பயமில்லை’ “என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments