பெங்களூரு:பெங்களூரில் வங்க தேச பெண் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு பெண்ணுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், மூன்று பேருக்கு குறைந்த காலத்தண்டனையும் விதிக்கப்பட்டுது.
பெங்களூரு ராமமூர்த்தி நகரில் கடந்த ஆண்டு மே 18ல் வங்க தேச பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்யும் வீடியோ வெளியாகி இருந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஒரு பெண் உட்பட 12 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஏழு பேர் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள்; பாஸ்போர்ட் விசா இல்லாமல் சட்ட விரோதமாக நுழைந்திருந்தனர்.பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணும் வங்க தேசத்தை சேர்ந்தவர்தான். அவரும் சட்ட விரோதமான முறையில் நுழைந்தவர் என்பதால் இவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.இவர்கள் அனைவரும் பெங்களூரு ராமமூர்த்தி நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுடன் ஏற்பட்ட தகராறில், ஏழு வாலிபர்கள் சேர்ந்து அப்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்தது.இது தொடர்பான வழக்கு பெங்களூரு 54வது சி.சி.எச்., நீதிமன்றத்தில் நடந்தது. இதில், 12 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது.விசாரணையின் முடிவில், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை; பெண் ஒருவருக்கு 20 ஆண்டு; மற்றொருவருக்கு ஐந்து ஆண்டு; இரண்டு பேருக்கு ஒன்பது மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் பிறழ் சாட்சியானதால் அவரை விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Advertisement