வடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி | North Korea confirms its first Covid-19 death

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, முதன்முதலாக ஒருவருக்கு தொற்று இருப்பதை நேற்று உறுதி செய்தது.

இந்த நிலையில், வடகொரியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், நேற்று மட்டும் சுமார் 18 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்த நிலையில் அதில் ஒருவருக்கு ஒமைக்ரானின் திரிபான BA.2 தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா…நாடு முழுவதும் ஊரடங்கு

மர்ம காய்ச்சலால் சுமார் 3,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,87,800 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் யாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படாததால், பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

கொரோனா தொற்றை சமாளிக்க வடகொரியா முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் உள்ள சுமார் இரண்டரை கோடி மக்களும் கொரோனா தடுப்பூசி போடாத நிலையில், மோசமான சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்ட வட கொரியா, வைரஸ் தொற்றை சமாளிக்கப் போராட வேண்டி இருக்கும் என சர்வதேச சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

மேலும் படிக்க | பசிபிக் பெருங்கடலின் கடல் தளத்தில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

Source link

Leave a Comment

Your email address will not be published.