Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்வயநாட்டில் மத்திய அமைச்சர்; பா.ஜ.,வின் புதிய தேர்தல் வியூகம்| Dinamalar

வயநாட்டில் மத்திய அமைச்சர்; பா.ஜ.,வின் புதிய தேர்தல் வியூகம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : கேரளாவில், வயநாடு பார்லி., தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது, அடுத்த லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ., தயாராகி வருவதை தெரிவிக்கிறது.

நேபாள இரவு விடுதியில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் இருந்த ‘வீடியோ’ தொடர்பாக பா.ஜ., – காங்., இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில், கடந்த லோக்சபா தேர்தலில், ராகுல் வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் திடீரென மத்திய பெண் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி இரண்டு நாள் பயணம் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று(மே 3) வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ஸ்மிதி இரானி, இன்று பழங்குடியினர் பகுதிகளுக்குச் செல்ல உள்ளார். அத்துடன் மாநில பா.ஜ., வினர் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். ராகுல் நேபாளத்தில் இருக்கும்போது, ஸ்மிதி இரானியின் வயநாடு வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது.

latest tamil news

கடந்த, 2014ல் உத்தர பிரதேசம், அமேதி பார்லி., தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஸ்மிரிதி இரானி. எனினும், அமேதி தொகுதியில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த துணை புரிந்து, மக்களின் பேராதரவுடன், 2019 பொதுத் தேர்தலில், ராகுலை தோற்கடித்தார்.

அமேதியை இழந்த ராகுலுக்கு வயநாடு கைகொடுத்தது. தற்போது ஸ்மிதி இரானியை வயநாட்டில் களமிறங்கியிருப்பதன் மூலம், பா.ஜ., வரும் லோக்சபா தேர்தலுக்கான புதிய வியூகத்தை துவக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments