Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது...

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது…

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பேச்சு: அ.தி.மு.க., உட்கட்சி மோதலை உருவாக்கியவர்களே பா.ஜ., தலைவர்கள் தான். ஒற்றை தலைமையாக இருந்தாலும் சரி, இரட்டை, மூன்றாம் தலைமையாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் அ.தி.மு.க., இனி, பா.ஜ.,வின் கைப்பாவையாக தான் இருக்கும். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில், அமித் ஷாவின் தலையீடு இருந்து வருகிறது.

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது… அப்படி என்றால், தமிழக காங்கிரசும், முதல்வர் ஸ்டாலின் கைப்பிடியில் தான் இருக்குதுன்னு, அவங்க குற்றம் சாட்டினால் ஏத்துப்பீங்களா?

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., குமார் பேட்டி: அ.தி.மு.க., ஆட்சியின் போதும், அதன்பின் கட்சியை வழிநடத்துவதிலும், தி.மு.க., எதிர்ப்பிலும், பழனிசாமி கொள்கையில் உறுதியாக இருக்கிறார். அதனால், மக்களும், கட்சியினரும் அங்கீகரிக்கும் அவரது தலைமையில், அ.தி.மு.க., செயல்பட வேண்டும். பழனிசாமி, 1ம் நம்பராகவும், பன்னீர்செல்வம், 2ம் நம்பராகவும் தான் இருக்கின்றனர்.

அ.தி.மு.க.,வினர் கருத்துகளை பார்த்தால், எல்லாம் ஏற்கனவே பேசி, ஒத்திகை பார்த்து அரங்கேற்றும் நாடகம் போலவே தோன்றுகிறதே!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன்ஒப்பிடும் போது, நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக காவல் துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் பாதுகாப்பு குறித்த குரல்கள் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதும், குற்றங்கள் பெருகுவதும் கவலை அளிக்கிறது.

latest tamil news

‘தி.மு.க., ஆட்சியில, சட்டம் – ஒழுங்கு சூப்பர்’னு போலீஸ் அதிகாரிகள் மார்தட்டிட்டு இருக்காங்களே… அப்ப, அதெல்லாம் நிஜமில்லையா?

உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து பேட்டி: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், விவசாயிகளுக்கு நன்மை செய்வதாகக் கூறி, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் பயன்கள் எதுவும், முழுமையாக விவசாயிகளை சென்றடையவில்லை. விவசாய விளை பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயிக்க வேண்டும் அல்லது அரசே பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

தனியா வேளாண் பட்ஜெட் போடணும்னு தானே கேட்டீங்க… போட்டாச்சு… அதற்கு மேல, இந்த அரசிடம் எதுவும் எதிர்பார்க்கக் கூடாது!

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments