விக்ரம் இசைவெளியீட்டு விழா : ரஜினி, விஜய், சூர்யா பங்கேற்பதாக தகவல்

‘விக்ரம்’ இசைவெளியீட்டு விழா : ரஜினி, விஜய், சூர்யா பங்கேற்பதாக தகவல்

14 மே, 2022 – 13:49 IST

எழுத்தின் அளவு:


Vikram-Audio-launch-:-Rajini,-Vijay,-Suriya-may-be-participate

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இதுதவிர நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Source link

Leave a Comment

Your email address will not be published.