Tuesday, July 5, 2022
Homeசினிமா செய்திகள்"'விக்ரம்' வெற்றிக்கு நடுவே `ஜன கண மன' படத்திற்கு வரவேற்பு என்பது..."- இயக்குநர் டிஜோ ஜோஸ்...

“‘விக்ரம்’ வெற்றிக்கு நடுவே `ஜன கண மன’ படத்திற்கு வரவேற்பு என்பது…”- இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி | Jana Gana Mana Director Dijo Jose Antony Interview

‘ஜன கண மன’ படத்திற்கு தமிழகத்திலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதே?

“படம் பார்த்துவிட்டு ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் தமிழக மக்கள் பாராட்டுவதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு தமிழ் கொஞ்சமாகப் பேச மட்டும் வரும். படிக்கத் தெரியாது. அதனால், தமிழர்களின் பாராட்டுகளை ட்ரான்ஸ்லேட் செய்து படித்து வருகிறேன். தினம்தினம் படத்தைக் கொண்டாடுவது சந்தோஷமாக இருக்கு. தமிழ் மக்களுக்கு ரொம்ப நன்றி.”

உங்களின் முதல் படமான ‘குயின்’ தமிழில் ’ஃப்ரண்ட்ஷிப்’பாக ரீமேக் செய்யப்பட்டது. ’ஜன கண மன’ படத்தை அனைத்து மொழியிலும் வெளியிடவேண்டும் என்பது யாருடைய முடிவு?

டிஜோ ஜோஸ் ஆண்டனி

டிஜோ ஜோஸ் ஆண்டனி

“இப்போ சினிமாத்துறை ரொம்பவே மாறியிருக்கும்போது எதுக்கு ரீமேக் பண்ணனும்? ’கேஜிஎஃப் 2 ’ மலையாளத்திலும் இருக்கு. இந்தியிலும் இருக்கு. அப்போ, ரீமேக் தேவையில்லையே? என்னுடைய முதல் படம் ’குயின்’ வெளியானபோது இருந்த சூழல் வேறு. இப்போது, அப்படியில்லை. ரீமேக்கில் எனக்கும் அவ்வளவா இன்ட்ரஸ்ட் கிடையாது. ’ஜன கண மன’ ஒரு பேன் இந்திய சினிமாதான். மலையாள சினிமாவிலிருந்து ஒரு இந்தியன் சினிமா வரவேண்டும். அதனால்தான், படத்திற்கு ‘ஜன கண மன’ என்று தலைப்பு வைத்தோம். பல மொழி நடிகர்களும் நடிக்கவேண்டும் என்றே தமிழ் நடிகர்களையும் இணைத்தோம். படம் இந்தியாவின் பல்வேறு பிரச்னைகளைப் பேசியுள்ளதால் நான்தான் தயாரிப்பாளர் சுப்ரியா மேடத்திடம் எல்லா மொழியிலும் வெளியிடலாம் என்றேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஓகே சொன்னார்.

குறிப்பாக, வெளியான அனைத்து மொழிகளிலும் இது ஒரு மலையாளப் படம் என்ற நினைப்பு வராத அளவிற்கு டப்பிங் சிறப்பாகச் செய்தார்கள். தமிழில் இயக்குநர் பாலாஜிதான் ஒருங்கிணைத்து பொருத்தமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களையும் தேர்வு செய்து பேச வைத்தார். ’தமிழ்ப் படம் பார்த்த மாதிரியே இருந்துச்சு’ன்னுதான் எல்லோரும் சொல்றாங்க. பாலாஜிக்கு ரொம்ப நன்றி. இது ‘விக்ரம் வேதா’ மாதிரியான ஒரு படம். யாரு ஹீரோ, யாரு வில்லன் என்பது தெரியாது. அது கற்பனை. இதில், உண்மை சம்பவங்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டோம்.”

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments