ஆன்டிகுவா: விண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச பேட்டர்கள் மீண்டும் திணறினர்.
விண்டீஸ், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 103 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் (7), ஜோஷுவா டா சில்வா (1), அல்சாரி ஜோசப் (0), கீமர் ரோச் (0) ஏமாற்றினர். கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (94), ஜெர்மைன் பிளாக்வுட் (63) கைகொடுத்தனர். முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 265 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4, கலீத் அகமது, எபாதத் ஹொசைன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (22) சுமாரான துவக்கம் தந்தார். மெஹிதி ஹசன் மிராஸ் (2) நிலைக்கவில்லை. இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் வங்கதேச அணி 2 விக்கெட்டுக்கு 50 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (17) ஏமாற்றினார். கைல் மேயர்ஸ் பந்தில் மோமினுல் ஹக் (4) அவுட்டானார். மகமதுல் ஹசன் ஜாய் (42) ஆறுதல் தந்தார். லிட்டன் தாஸ் (17) நிலைக்கவில்லை.
உணவு இடைவேளைக்கு பின், 2வது இன்னிங்சில் வங்கதேச அணி 6 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்து, 24 ரன் பின்தங்கி இருந்தது. கேப்டன் சாகிப் அல் ஹசன் (25), நுாருல் ஹசன் (5) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் சார்பில் கீமர் ரோச், அல்சாரி ஜோசப், கைல் மேயர்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
Advertisement