விழுப்புரம்: பழைமையான சிவன் கோயிலில் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு – கூறும் செய்தி என்ன? | Chola period inscription found in Villupuram village

விழுப்புரம் அருகே கப்பூர் என்னும் கிராமத்தில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் த.ரமேஷ் மற்றும் விழுப்புரம் கணிப்பொறியாளர் ம. பிரகாஷ் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவ்வூரில் உள்ள ஒரு பழைமையான சிவன் கோயிலில் சோழர் கால கல்வெட்டை கண்டறிந்துள்ளனர்.

லகுலீசர் சிற்பம்

லகுலீசர் சிற்பம்

இது தொடர்பான தகவல்களை அவர்கள் கூறியபோது, “ஊரின் வடக்கே செய்தருளி ஈஸ்வரர் என்னும் பழைமையான சிவன் கோயிலின் கருவறையின் தென்கிழக்கு பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனின் இரண்டாம் ஆட்சி ஆண்டான கி.பி. 1,072-ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இவ்வூரை ‘கப்பூர்’ என்றும், இங்குள்ள இறைவனை ‘செய்தருளு நாயனார்’ என்றும் அழைக்கிறது.

இக்கோயிலை நிர்வகித்த நேரா பிராணன் என்பவனிடம் மூன்று பசுக்களை சந்தி விளக்கு எரிப்பதற்குத் தானமாக வழங்கியதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

சோழர்கால கல்வெட்டு

சோழர்கால கல்வெட்டு

இந்தத் தகவல்களில் இருந்து இவ்வூர் சோழர் காலத்திலிருந்து கப்பூர் என்று வழங்கப்பட்டதை அறிகிறோம். மேலும் இக்கோயிலில் பல்லவர் காலத்திய இரண்டு விஷ்ணு சிற்பங்களும் ஒரு விநாயகர் சிற்பமும் மீசையுடன் கூடிய லகுலீசர் சிற்பமும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக உள்ளது. எனவே பல்லவர் காலத்திலேயே இவ்வூரில் ஒரு சிவன் கோயில் இருந்து பின்பு சோழர் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோயிலின் அதிட்டானம் மட்டும் கருங்கல்லை கொண்டும் மற்ற பகுதிகள் செங்கல் லை கொண்டும் கட்டப்பட்டுள்ளதால் தற்போது சிதலமடைந்து காணப்படுகிறது.

எனவே இந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையினர் பராமரிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

Source link

Leave a Comment

Your email address will not be published.