Friday, July 1, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.12.55 லட்சம் அபராதம்!...

விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.12.55 லட்சம் அபராதம்! | Vismaya Case: Husband Kiran Kumar gets 10-yr jail term

நீதிபதி இன்று வழங்கிய தீர்ப்பில் வரதட்சணை கொடுமைக்காக கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தற்கொலைக்குத் தூண்டியதற்காக 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் கூடுதலாகச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், குடும்ப வன்முறை குற்றத்துக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, வரதட்சணை தடைச்சட்டம் பிரிவு 3-ன் கீழ் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பத்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 18 மாதங்கள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், வரதட்சணை தடைச்சட்டம் பிரிவு 4-ன் கீழ் ஓராண்டு சிறையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கிரண்குமார் - விஸ்மயா

கிரண்குமார் – விஸ்மயா

சிறைத் தண்டனையை ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதால், கிரண்குமாருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தம் 12.55 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையில் இரண்டு லட்சம் ரூபாய் விஸ்மயாவின் பெற்றோருக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தீர்ப்புக்குப் பிறகு கிரண்குமாரிடம் எதாவது கூற விரும்புகிறீர்களா என கோர்ட் கேட்டது. அதற்குத் தலை குனிந்தவாறே பதில் கூறிய கிரண்குமார், “என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லை. அப்பாவுக்கு ஞாபகமறதி இருப்பதால், திடீரென ஏதாவது நடக்கும் அபாயம் உண்டு. குடும்பத்துக்கு நான் ஒரே ஆதாரம் என்பதால், என் வயதையும் கருத்தில்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

இதே கருத்தை நேற்றும் கோர்ட்டில் கூறிய கிரண்குமார் தரப்பு, கிரிமினல் வழக்கில் அவர் ஈடுபடவில்லை என்றும் கூறியிருந்தது. ஆனால், “இது தனிப்பட்ட நபருக்கு எதிரான வழக்கு இல்லை. வரதட்சணை என்ற சமூகக் கொடுமைக்கு எதிரான வழக்கு. அரசு ஊழியரான கிரண்குமாருக்கு வரதட்சணை ஒன்றே நோக்கமாக இருந்தது. எனவே, விஸ்மயாவின் தற்கொலை என்பது கொலைக்குச் சமமானது. இந்த வழக்கின் தீர்ப்பு சமூகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்” என அரசுத் தரப்பு வாதிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments