Sunday, July 3, 2022
Homeசினிமா செய்திகள்"வெற்றிமாறன் என் நண்பன்; ஆடுகளம் படத்தப்போ எல்லோருக்கும் அவர் சொன்ன கண்டிஷன்!" - நரேன்|Actor aadukalam...

“வெற்றிமாறன் என் நண்பன்; ஆடுகளம் படத்தப்போ எல்லோருக்கும் அவர் சொன்ன கண்டிஷன்!” – நரேன்|Actor aadukalam naren interview

இயக்குநர் மிஷ்கின் தனக்குப் பிடித்த நடிகரென உங்கள் பெயரையும் ஒருமுறை சொன்னார். அவர் படத்தில் நடித்த நடிக்கும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?

“மிஷ்கின் ஒரு குழந்தை மாதிரி. நான் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது `அஞ்சாதே’ திரைப்படத்திற்காக என்னை அழைத்தார். ஒரு கதாபாத்திரம் பண்ண வேண்டும். ஒரு பெண்ணுடைய அப்பாவாக நீங்கள் என்ன செய்வீர்களோ, அதைச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். ஒரு காட்சி நடித்துக் காண்பித்தார். அப்போது நான், “இதேபோல பண்ணனுமா மிஷ்கின்” என்று கேட்டேன். அதற்கு அவர், “எனக்கு எப்படினு சொல்லத் தெரியல. ஆனா எனக்கு இதுமாதிரி வேணும்” என்று சொன்னார். உடனே நான் வேறு மாதிரி நடித்துக் காட்டினேன். அது அவருக்குப் பிடித்துவிட்டது. மிஷ்கின் எளிமையாகப் பழகக்கூடியவர். அவரிடம் எதுவாக இருந்தாலும் ரொம்ப ஓப்பனாக பேசலாம். உண்மையாக இருப்பார்.”

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments