பெங்களூரு, ”சட்டமேலவை தேர்தல் சீட் விஷயமாக, கட்சி தலைவர், எதிர்க்கட்சி தலைவருடன் ஆலோசிப்பார். அவருக்கு அதுபற்றி தெரிந்திருக்கும். எனக்கு எதுவும் தெரியாது,” என காங்கிரஸ் தேர்தல் பிரசார கமிட்டி தலைவர் எம்.பி.பாட்டீல் விரக்தியுடன் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:சட்ட மேலவை தேர்தல் சீட் தொடர்பாக, ஆலோசனை நடத்த என்னை அழைக்கவில்லை. என்னுடன் விவாதிக்கவும் இல்லை. இந்நிலையில் எஸ்.ஆர்.பாட்டீலுக்கு டிக்கெட் கொடுக்க, நான் எதிர்ப்பு தெரிவிக்கும் பேச்சுக்கே இடமில்லை. நான் யாருக்கு ஆதரவாகவும் இல்லை; எதிராகவும் இல்லை. நான் ஏன் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.சட்டமேலவை தேர்தல் சீட் விஷயமாக, கட்சி தலைவர், எதிர்க்கட்சி தலைவருடன் ஆலோசிப்பார். அவருக்கு அதைப்பற்றி தெரிந்திருக்கும். எனக்கு எதுவும் தெரியாது.நாராயண குரு, பசவண்ணர் தத்துவ ஞானிகள். இவர்களின் தத்துவங்களை, எதிர்க்கால சந்ததியினர் தெரிந்து கொள்வது அவசியம். பாடங்களில் ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளை சேர்ப்பது சரியல்ல. நாராயணகுரு, ஈ.வெ.ரா., பகத்சிங் பாடங்கள் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.
Advertisement