குடும்பத்தினர் அனைவர் பெயருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து சவுமியநாராயணபெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்துக்கு செப்பு தகட்டில் தங்கத்தகடு பொருத்தும் பணியை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் சயன கோலத்திலுள்ள மூலவர், தாயார், ஆண்டாள், ராமானுஜர், திருக்கோஷ்டியூர் நம்பிகள் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். தேரில் எழுந்தருளிய உற்சவரை தரிசனம் செய்தார். சிவகங்கை எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வந்திருந்த கட்சி நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு மரியாதை அளித்தனர்.