வேலூர் மாவட்டம், சேர்க்காடு கிராமத்திலிருக்கிறது திருவள்ளுவர் பல்கலைக்கழகம். இதன் அருகிலுள்ள கூட்ரோடு பகுதியில், ‘இந்துமதி பாண்டு’ என்ற பெயரில் அனில்குமார் என்பவர் நகை அடகுக்கடை நடத்திவருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இன்று காலை, கடையைத் திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அடகுக்கடைக்கு அருகிலுள்ள ஜூஸ் கடையின் பின்பக்கச் சுவரைத் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பக்கவாட்டுச் சுவரையும் துளையிட்டு அடகுக் கடைக்குள் புகுந்திருக்கிறார்கள். லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 750 கிராம் தங்க நகைகள், 30 கிலோ வெள்ளிப்பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக கடை உரிமையாளர் அனில்குமார் தெரிவித்திருக்கிறார்.
வேலூர்: அடகுக்கடைச் சுவரில் துளையிட்டு புகுந்த கும்பல்… ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை! | jewelry loot at Vellore pan shop police investigation goes on
RELATED ARTICLES