Saturday, June 18, 2022
Homeசினிமா செய்திகள்ஷாருக் கானின் `பதான்' படத்தை வாங்கிய அமேசான் ப்ரைம் விலை எவ்வளவு தெரியுமா?

ஷாருக் கானின் `பதான்' படத்தை வாங்கிய அமேசான் ப்ரைம் விலை எவ்வளவு தெரியுமா?

நடிகர் ஷாருக் கான் நடிப்பில் யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்து வரும் பதான் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. படம் தொடங்கி நீண்ட நாட்களான நிலையில் வரும் ஜனவரி 25-ம் தேதி படம் வெளியாகும் என்று ஷாருக்கான் அறிவித்திருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டுக்குg; பிறகு ஷாருக் கான் நடிப்பில் படம் எதுவும் திரைக்கு வரவில்லை. கடைசியாக ஜீரோ படம் 2018-ல் வெளியானது. இதனால் பதான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பதான் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிடப்படும் என்று ஷாருக் கான் ஏற்கெனவே தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருக்கிறார். ஷாருக் கான் மட்டுமல்லாது ஜான் ஆபிரகாம் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இதனை இயக்குகிறார்.

ஷாருக்கான்

தியேட்டரில் வெளியான சில நாட்களில் ஒடிடி தளத்திலும் இப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கான உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கி இருக்கிறது. அமேஸான் ஒடிடி தளத்தில் வெளியிடுவதற்காக ரூ. 200 கோடி கொடுத்து இப்படத்தை வாங்கி இருக்கிறது என்று செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால் பதான் படத்தை யஷ் ராஜ் பிலிம் 250 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பதான் படத்தை வாங்கியது குறித்த தகவலை அமேசான் ப்ரைம் நிறவனம் இன்னும் உறுதிபடுத்தவில்லை. அமேசான் ப்ரைம் பாலிவுட் படங்களை வாங்க கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து வருகிறது.

நடிகர் ஷாருக்கான் அடுத்து ராஜ்குமார் ஹிரானி மற்றும் அட்லியின் படத்திலும் நடித்து வருகிறார். அட்லி இயக்கத்தில் உருவாகும் ஷாருக்கான் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments