வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
ராஜிவ் படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. பேரறிவாளனை தொலைபேசியிலும், நேரிலும் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார். இதனை திமுகவினர் தங்களது தேர்தல் வாக்குறுதி வெற்றியாகவே போஸ்டர் ஒட்டி பெருமிதத்துடன் கொண்டாடி வருகின்றனர். இது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், வாய் மூடி எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு அமைதி காத்து வருகிறது.
இந்நிலையில், பேரறிவாளன் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சிவசேனா மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், இதுபோன்ற விவகாரத்தில் சிலர் புதிய பரிணாமத்தை அளிப்பது. அது தேசத்திற்கு ஏற்றதாக கருதமுடியாது. அனைவருக்கும் தமிழகத்தின் அரசியல் பற்றி தெரியும். ராஜிவ் நம்முடைய தேசத்தின் தலைவர். அவர் தன்னையே தியாகம் செய்துள்ளார். அவர் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டவர். ஒருவேளை, ராஜிவ் படுகொலையை வரவேற்பதாக ஸ்டாலின் கருதும்பட்சத்தில், என்னை பொறுத்தவரை, இது நம்முடைய கலாச்சாரம் இல்லை.’இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement