அமரேவின் வழக்கத்திற்கு மாறான இந்தப் பழக்கம் குறித்து, (லெஸ்டர் இ. ஃபிஷர் குரங்குகளின் ஆய்வு மற்றும் பாதுகாப்பு) உயிரியல் காட்சி சாலையின் இயக்குநரான ஸ்டீபன் ராஸ் கூறுகையில், “இது அநேகமாக ஒரு சுழற்சி நிகழ்வாக இருக்கலாம், கொரில்லா எவ்வளவு ஆர்வம் காட்டுகிறதோ, அவ்வளவு அதிகமாக மக்கள் அந்தச் செயலில் ஈடுபட விரும்புகிறார்கள். ஆனால் மக்கள் இதனால் ஏற்படும் அபாயங்களை மறந்து விடுகின்றனர்” என தெரிவித்தார்.
மூன்று கொரில்லாக்களுடன் அமரே இருந்தாலும், போனுக்கு அடிமையானதால் கண்ணாடிக்கு அருகிலேயே அமர்ந்து கொள்கிறது, இதைத் தடுக்க கண்ணாடிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் கயிற்றைத் தொங்க விட்டுள்ளனர். சிலர் கொரில்லாவின் கவனத்தை திசைத்திருப்பும் போது பார்வையாளர்களுக்கு பிரச்னையைச் சொல்லிப் புரிய வைக்கின்றனர்.