Saturday, June 18, 2022
Homeஜோதிடம்ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமியின் அபூர்வ மஹாஹோமம்; நீங்களும் சங்கல்பிக்கலாம்!| mahalaxmi homam in madurai...

ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமியின் அபூர்வ மஹாஹோமம்; நீங்களும் சங்கல்பிக்கலாம்!| mahalaxmi homam in madurai thirumangalam temple

வாசகர்கள் நலம் பெறவும், வளம் பெறவும், ஸ்ரீமகாலட்சுமி ஹோமம் நடத்த உள்ளோம். இந்த ஹோமத்தை சத்ய யுக சிருஷ்டி கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம். அன்பர்கள் யாவரும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்கலாம்.

வஜ்ராயுதம், அரம்பையர்கள், சிந்தாமணி, சூடாமணி, கௌஸ்துப மணி, மூத்த தேவி, அகலிகை, காமதேனு, கற்பக விருட்சம், அமுதம், அஷ்ட திக்கு கஜங்கள், இவற்றோடு பாற்கடலில் தோன்றியவள் திருமகள். இவளின் திருவடிவங்கள் 64 என்று புராணங்கள் கூறுகின்றன. லக்ஷ்மம் என்றால் அடையாளம் என்றும் பொருள், உலகில் உள்ள அத்தனை அழகுக்கும், செல்வங்களுக்கும் அடையாளமாக இருப்பவள் லக்ஷ்மி தேவி.

இவளே பூரண லட்சுமியாய் பிரமாண்ட வடிவில் காட்சி தருவது ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமி என்ற வடிவில்தான் என்கின்றன புராணங்கள். தேவர்களுக்கும் மானிடர்களுக்கும் 18 கரங்கள் கொண்டு வேண்டியதை எல்லாம் வழங்கும் தேவியாக இவள் விளங்குகிறாள். கலைமகள், மலைமகள் ஆகியவர்களின் அம்சத்தோடு விளங்கும் இந்த தேவியின் அருள் வடிவம் மதுரைக்கு அருகே உள்ள ஒரு ஆலயத்தில் உள்ளது.

மதுரை திருமங்கலம் தாண்டி, மதுரை – விருதுநகர் சாலையில், ராயபாளையம் செல்லும் வழியில் உள்ளது சத்ய யுக சிருஷ்டி ஆலயம். இது பிரமாண்ட வடிவில் பூரணமான ஆலயமாக விளங்குகிறது. முக்தி நிலையம் எனப்படும் இங்கு அனைத்து தெய்வங்களின் சந்நிதிகளும் உள்ளன. 108 சந்நிதிகளில் 600க்கும் மேற்பட்ட தெய்வங்களின் மூர்த்தங்கள் உள்ளன. இதில் 18 கரங்கள் கொண்ட ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமி திருவடிவமும் ஒன்று.

அஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமி

அஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமி

அபூர்வ வகை கோலத்தில் வீற்றிருக்கும் இந்த திருமகளை வரும் வழிபட சகல செல்வங்களும் சேரும் என்பது நிச்சயம். 15-5-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று (விஷ்ணுபதி புண்ய காலம், பௌர்ணமி சுவாதி நட்சத்திரம்) காலை 10 முதல் 11.30 மணி வரை நம் வாசகர்கள் நலம் பெறவும், வளம் பெறவும், ஸ்ரீமகாலட்சுமி ஹோமம் நடத்த உள்ளோம். இந்த ஹோமத்தை சத்ய யுக சிருஷ்டி கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம். அன்பர்கள் யாவரும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்கலாம். கடன் பிரச்னை, காரிய ஸித்தி வேண்டும் அன்பர்களுக்கு இந்த ஹோமம் ஒரு நல்வாய்ப்பு எனலாம். இந்த ஸ்ரீமகாலட்சுமி ஹோமத்தில் சங்கல்பித்துப் பிரார்த்தித்தால் நித்ய சௌபாக்கிய, ருண நிவாரண வாழ்வை அடைவர் என்பது நிச்சயம்.

பொறுமையும் நன்மையையும் அருளக்கூடியவள் திருமகள் என்று அதர்வண வேதம் கூறும். திருமாலின் திருமார்பில் வாழும் இவள். கணவனை நீங்காத இயல்பு கொண்டவள். இவளை வணங்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலமும் சௌபாக்கிய வாழ்வும் அருள்பவள். பத்மாட்சகன் என்ற அசுரனின் பக்திக்கு மெச்சிய திருமகள், அவன் வளர்த்த யாகத்தீயில் அவனுக்குத் திருமகளாக அவதரித்தாள் என்றும் ஒரு புராண கதை உண்டு.

யாகங்களால் மகிழ்பவள் திருமகள். அதிலும் குறிப்பாக மஹாலட்சுமி ஹோமத்தில் எவர் கலந்து கொண்டாலும் அவர்கள் வேண்டியதை அருள்பவள் மகாலட்சுமி. ‘மங்கலத்துக்கெல்லாம் மங்கலமானவள் தாயார் திருமகள்’ என்று போற்றுவார் ஸ்ரீவேதாந்த தேசிக சுவாமிகள். வைகுண்டத்தில் ரமா தேவி என்றும், சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமி என்றும், பாதாள லோகத்தில் நாகலட்சுமியாகவும், ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும், விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், நல்லவர்களிடம் ப்ரீதி லட்சுமியாகவும், ஞானிகளிடம் தயா லட்சுமியாகவும், சரண் அடைந்தவர்களுக்கு ஆதிலட்சுமியாகவும் விளங்குபவள் திருமகள்.

இந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவதத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றான். குபேரன் லட்சுமியை வணங்கி நவநிதிகளையும் அளகாபுரி பட்டணத்தையும் பெற்றான். மன்மதன் அழகையும், அஸ்வினி தேவர்கள் ஒளியையும் திருமகளிடம் இருந்தே பெற்றார்கள் என்கின்றன புராணங்கள். நீங்காத செல்வம், நிலைத்த புகழ், அதிகார பலம், செல்வாக்கு-சொல்வாக்கு, பதிவு யோகம், அனுபவிக்கும் திறன் என அனைத்தையும் அருள்பவள் மகாலட்சுமி.

அபூர்வமான சமித்துக்கள், மலர்கள், மூலிகைகள் கொண்டு நடைபெறும் இந்த மகாலட்சுமி ஹோமத்தால் உங்கள் வீட்டில் சந்தோஷம், மன நிம்மதி பெருகும். சுற்றத்தார் நம்பிக்கை கூடும். கடன் தொல்லை நீங்கும். வியாபார-தொழில் அபிவிருத்தி உண்டாகும். அனைத்திலும் வெற்றி வசமாகும். தீராத நோய்கள் தீரும். தனம், தான்யம், காரிய ஸித்தி, மாங்கல்ய பலம், மகப்பேறு, சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி உயர்வு, சொந்த வீடு, வேலை வாய்ப்பு, உறவு சமூகம், செல்வாக்கு, சொல்வாக்கு, வெளிநாட்டு யோகம் என சகல நன்மைகளும் உண்டாகும் என்பது நிச்சயம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாதவர்கள், இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments