Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்ஸ்ரீநிதி: அஜித் ரசிகர்களின் கீழ்த்தரமான கமெண்ட்ஸ்களால் விரக்த்தி அடைந்த சீரியல் நடிகை ஸ்ரீநிதி…! - serial...

ஸ்ரீநிதி: அஜித் ரசிகர்களின் கீழ்த்தரமான கமெண்ட்ஸ்களால் விரக்த்தி அடைந்த சீரியல் நடிகை ஸ்ரீநிதி…! – serial actress sreenithi frustrated by ajith fans’ derogatory comments!

வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு போட்டியாக பல சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்பொழுது டிஜிட்டல் உலகில் எந்த நட்சத்திரத்தை வேண்டுமானாலும், பிரபலத்தை வேண்டுமானாலும் எளிதாக தொடர்பு கொள்ள முடியும் என்ற சூழல் இருக்கிறது. சில நேரங்களில் ஒருவர் பிரபலமாக இருப்பதே அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாகவும் மாறிவிடுகிறது.

சாதாரணமாக ஒருவர் சொல்லும் கருத்து அப்படியே கடந்து போவது போல மறைந்து விடும். ஒரு நடிகர் அல்லது நடிகை சொல்லும் கருத்து மிகப் பெரிய பிரச்சனையாகி விடுகிறது. அப்படி தான் ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. பிரபல நடிகரின் திரைப்படத்தை பற்றி இவர் சொன்ன விமர்சனம் இவருக்கு எதிர்மறையாக திரும்பியுள்ளது.

அரசியல் ஆசையில் தனுஷ்…அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சின்னத்திரை ரசிகர்களுக்கு நடிகை ஸ்ரீநிதி மிகவும் பரிச்சயமான முகம். விஜய் டிவியில் அறிமுகமாகி யாரடி நீ மோகினி சீரியலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை ஸ்ரீநிதி. வலிமை திரைப்படத்தைப் பார்த்து தனது கருத்தை கூறியுள்ளார். வலிமை திரைப்படத்தைப் பற்றி தன்னுடைய கருத்தாக அவர் பகிர்ந்து கொண்ட வீடியோ ஒன்றும் வலைத்தளத்தில் சில நாட்களுக்கு முன் தாறுமாறாக பகிரப்பட்டது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பிறகு சில வாரங்களுக்கு முன் வெளியானது. ஆக்ஷன் சீக்வன்ஸ் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்ற அதே நேரத்தில் எதிர்மறையான விமர்சனங்களையும் திரைப்படம் பெற்றிருந்தது. வலிமை திரைப்படத்துக்கு பலரும் விமர்சனம் கூறியிருந்த நிலையில், நடிகை ஸ்ரீநிதியும் திரைப்படத்தை விமர்சித்திருந்தார்.

வலிமையில் நடிகை ஸ்ரீனிதியுடன் ஒன்றாக நடித்த நடிகை சைத்ராவும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது என்று மீடியாவில் ஸ்ரீனிதியிடம் கேட்க, அதற்கு, அஜீத் சாரை நேரில் கூட பார்த்து விடலாம். ஆனால் வலிமை திரைப்படத்தை பார்ப்பதற்கு எனக்கு பொறுமை இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், படத்தில் பைக் தான் ஓடிக்கொண்டே இருக்கிறது. படம் ஓடுவதாக தெரியவில்லை என்றும், அஜித் சார் ரொம்ப கியூட்டாக இருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார். இவ்வாறு நடிகை ஸ்ரீநிதி வலிமை பற்றி தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலர் ஸ்ரீநிதியின் கருத்துக்கு எதிர்மறையான கருத்தை பதிவு செய்து வந்துள்ளனர். ஒரு சிலரிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக ஸ்ரீநிதி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது

அது மட்டுமின்றி சில நாட்களுக்கு முன் இவர் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் ஒரு ரசிகர் ’பேச்சுலர்’ திரைப்படத்தில் நடித்திருந்த திவ்யபாரதியின் கதாபாத்திரத்தை போலவே இவரையும் பாலியல் வன்கொடுமை செய்து ஆதரவில்லாமல் விட வேண்டும் என்று மிகவும் கீழ்த்தரமாக கமெண்ட் செய்திருந்தார்.

இதே போல கொலை மிரட்டல் வருவதோடு மட்டுமல்லாமல், மிகவும் கீழ்த்தரமான தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாக ஸ்ரீநிதி மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார். தன்னுடைய வாழ்க்கையில் எதுவுமே எளிதாக கிடைக்கவில்லை எல்லாவற்றுக்கும் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பதை இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரி மூலம் அவர் மிகவும் வருத்தமாக பதிவு செய்திருந்தார்.

இதைத் தவிர சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில்விரக்தியான மனநிலையில் இருப்பதாகவும், அழுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு காரணம் அஜித் ரசிகர்களின் கீழ்த்தரமான கமெண்ட்டுகளா அல்லது வேறு ஏதாவதா என்பது இப்பொழுதுவரை சரியாக தெரியவில்லை.

மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments