“ஹிந்தி எப்போதும் தேசிய மொழிதான்”- சர்ச்சை ஏற்படுத்திய அஜய் தேவ்கன் vs கிச்சா சுதீப் ட்விட்டர் மோதல் | Hindi as National Language – Actors Ajay Devgn vs Kichcha Sudeep twitter clash

மேலும், அதன் தொடர்ச்சியாக, “நீங்கள் ஹிந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனென்றால் நாங்கள் மதித்து, நேசித்து ஹிந்தியை கற்றுக் கொண்டிருக்கிறோம். புண்படுத்துவது என் நோக்கம் இல்லை. ஆனால், இப்போது எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை என்னுடைய பதிலை நான் கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் அது உங்களால் எப்படிப் புரிந்து கொள்ளப்படும் என்று. நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?!” என்றார்.

இந்தப் பதிலுக்குப் பிறகு அஜய் தேவ்கன், “நீங்கள் என் நண்பர். தவறாக நான் புரிந்துகொண்டதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நான் எப்போதும் நமது துறை ஒன்று என்றே கருதி வருகிறேன். நாம் எல்லா மொழிகளையும் நேசிக்கிறோம். அதே போல எல்லோரும் நமது மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று பகிர்ந்திருந்தார்.

இந்த விவாதத்தைச் சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள் பலர், ‘இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லவே இல்லை, அலுவல் மொழியே உண்டு’ என்று விளக்கி ட்வீட் செய்துவருகின்றனர்.

அதேபோல் மேலும் பலர், ‘சமீபமாக தென்னிந்திய படங்கள் பல பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டி வருவதும், ஹிந்திப் படங்கள் பல தோல்வியடைந்து வருவதும் பாலிவுட் டாப் ஸ்டார்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது. அதன் வெளிப்பாடே இந்த விவாதம்’ என்றும் பேசி வருகின்றனர்.

Source link

Leave a Comment

Your email address will not be published.