தர்மசாலா-ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை வளாகத்தின் நுழைவாயிலில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் கொடி கட்டப்பட்டது மற்றும் சுவரில் அதற்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவு வாசகம்பஞ்சாபில் இயங்கி வந்த பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் ஒடுக்கப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் மீண்டும் தலைதுாக்கியுள்ளன.இந் நிலையில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள ஹிமாச்சலப் பிரதேசத்தின் சட்டசபை வளாக நுழைவாயிலில், காலிஸ்தான் அமைப்பின் கொடி கட்டப்பட்டது நேற்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சட்டசபை வளாக சுவரில், காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.அந்த கொடிகள் அகற்றப்பட்டு, வாசகங்கள் அழிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த சம்பவம் ஹிமாச்சலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாதுகாப்புதர்மசாலாவில் உள்ள சட்டசபை வளாகத்தில், குளிர்கால கூட்டத் தொடர் மட்டுமே நடக்கும்.
அதனால், அந்த நேரத்தில் மட்டுமே பாதுகாப்பு அதிகமாக இருக்கும்.தற்போது பாதுகாப்பு குறைவாக உள்ளதை பயன்படுத்தி சிலர் இந்த விஷமத்தனத்தில் ஈடுபட்டு உள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு, மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
Advertisement