புதுடில்லி: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 87, வயதில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
ஹரியானா முதல்வராக கடந்த 1999 முதல் 2005 வரை, இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆசிரியர்கள் தேர்வாணைய முறைகேடுகள் தொடர்பான வழக்கில், டில்லி நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .கடந்த 2017 தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, 10ம் வகுப்பு தேர்வு எழுதினார்.இதில் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் சவுதாலா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
|
இதற்கிடையே, கடந்தாண்டு ஜூன் மாதம் தண்டனை முடிந்து, சவுதாலா சிறையிலிருந்து வெளியே வந்தார். ஹரியானா திறந்த நிலை கல்வி வாரியம் வாயிலாக அவர், 12ம் வகுப்பு தேர்வையும் எழுதினார். ஆனால், 10ம் வகுப்பு ஆங்கில தேர்வில் அவர் தேர்ச்சி பெறாததால், அவருடைய, 12ம் வகுப்பு தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சவுதாலா சிர்சா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதினார். நேற்று தேர்வு முடிவுகளை வெளியிட்ட கல்வி வாரியம், சவுதாலா ஆங்கில தேர்வில் 88 % மதிபெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நேற்று நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க காரில் வந்த சவுதாலாவிடம் கல்வி வாரிய அதிகாரி மதிப்பெண் சான்றிதழை வழங்கினார். இனி அடுத்ததாக 12-ம் வகுப்பு தேர்வு முடிவை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகிறது.
Advertisement