ஜனநாயக அரசு பலம் கொண்டது தான் என்பதை நிரூபிக்க, ஆக்கிரமிப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், சீனர்கள் அவர்கள் எல்லைக்குள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என அரசியல் வேற்றுமைகளை மறந்து அனைத்து அமைப்புகளும் முழங்குவதாகவும் அவர் கூறினார். சீன ஆக்கிரமிப்புக்கான உள்நோக்கத்தை கண்டறிவதுடன், போர் முயற்சிகளை பலப்படுத்த வேண்டும் என்றும் அண்ணா வலியுறுத்தினார்.
படிக்கசுஷாந்த் சிங் பிரிவால் தவித்து வாடும் செல்லப்பிராணி
பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராக இருக்கும் போது, ஏன் சீனா போரிட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அணிசேரா கொள்கையை பலவீனம் என சீனர்கள் கருதுவதாகவும், நம்மால் சண்டை போட இயலாது என நினைக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நாம் சண்டையிட மாட்டோம் எனக் கூறுவதன் பொருள் நம்மால் சண்டையிட முடியாது என்பதல்ல என்ற பாடத்தை சீனாவுக்கு புகட்டுவோம் என்றும் அண்ணா தெரிவித்தார்.
சீனா எப்போதெல்லாம் பலம்பெறுகிறதோ, அப்போதெல்லாம் தன் எல்லையை விரிவாக்கவே முனைகிறது என அண்ணா சுட்டிக்காட்டினார். சீன தலைவர் ஒருவர் திபெத் சீனாவுக்கு சொந்தம் என்றும், பூடானும், சிக்கிமும், லடாக்கும் திபெத்துக்கு சொந்தம் என்றும் பேசியதை குறிப்பிட்ட அண்ணா, இந்த கருத்து நடைமுறைப்படுத்தப்பட்டால் அது நீண்ட கால போருக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
போர் தொடர்பான விளம்பரங்களுக்கு திமுக ஊடகங்களில் இலவசமாக இடம் ஒதுக்க தயாராக இருப்பதாகவும் அண்ணா தெரிவித்தார். தொடர் பரப்புரைகளின் மூலம் சீனர்களை விரட்டுவதில் நாம் ஒரே குறிக்கோள் கொண்டவர்கள் என்பதை மக்கள் உணரச்செய்ய வேண்டும் என்றும் அண்ணா வலியுறுத்தினார். நாட்டின் கவுரவத்தையும், பாதுகாப்பையும் காக்கும் போரின் பெருமைக்குரிய அணிவகுப்பு பெயர் பட்டியலில் திமுகவின் பெயரை பொறிக்கிறேன் என்று கூறி அண்ணா தனது உரையை நிறைவு செய்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.