Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்2 காதல் தோல்விகள்; தயங்கிய ரன்பீர்; விருது விழாவில் அறிவித்த ஆலியா! காதல் டு கல்யாணக்...

2 காதல் தோல்விகள்; தயங்கிய ரன்பீர்; விருது விழாவில் அறிவித்த ஆலியா! காதல் டு கல்யாணக் கதை!|Bollywood actress Alia Bhatt and her husband Ranbir Kapoor’s love story

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்-ஆலியா பட் காதல் ஜோடிக்கு கடந்த 14-ம் தேதி திருமணம் நடந்தது. இத்திருமணத்தை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ரன்பீர் கபூர் வீட்டில் திருமண வரவேற்பும் நடத்தப்பட்டது. காதல் நாயகனான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இடையே காதல் மலர்ந்த கதை ஒரு சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் ரன்பீர் கபூர் நடிகை தீபிகா படுகோனேயை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். அதன் பிறகு மற்றொரு பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப்பை பல ஆண்டுகள் காதலித்தனர். ஆனால் அந்தக் காதலும் ரன்பீர் கபூருக்குக் கைகூடவில்லை. ரன்பீர் கபூர் காதலித்த இரண்டு பெண்களுமே வேறு ஒரு நடிகரை காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். தற்போது ரன்பீர் கபூரும் திருமணம் செய்து கொண்டார். ஆரம்பித்திலிருந்தே தனது காதல் குறித்து பல இடங்களில் ரன்பீர் கபூர் பல இடங்களில் பேசத் தயங்கியிருக்கிறார்.

11 வயதிலேயே ரன்பீரைப் பிடிக்கும்

நடிகை ஆலியா பட்டை பொருத்தவரை தனக்கு 11 வயதிலிருந்த ரன்பீர் கபூரைப் பிடிக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டம்

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டம்

அதன் பிறகு ரன்பீர் கபூர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவி இயக்குனராக இருந்தார். அப்போது பிளாக் என்ற படத்தின் நடிகர், நடிகை தேர்வு மற்றும் படப்பிடிப்பு ஒத்திகைக்காக ஆலியா பட் சென்றிருக்கிறார். அங்கு தான் 11வது வயதில் இருந்து தனக்குப் பிடித்தமான ரன்பீர் கபூரை முதன்முறையாகக் கண்டார். அப்போதே அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு விட்டது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments