கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள், வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அமெரிக்க உளவுத் துறை உறுதி செய்தது.
லடாக்கின் காரகோரத்தில் இருந்து வடகிழக்கின் அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவுக்கு இந்திய – சீனா எல்லைப் பகுதி நீள்கிறது. லடாக் மற்றும் வடகிழக்கில் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை எப்பொதுமே இருந்து வருகிறது.
கடந்த 20-ம் தேதி சிக்கிமின் கிழக்குப் பகுதியான நதுலா எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 20 சீன வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்திய ராணுவ தரப்பில் 4 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்திய – சீன ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
“எல்லை மோதல் தொடர்பாக எனக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.