Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்3 வாரங்களில் 7 மாநிலங்களுக்கு அமித்ஷா சுற்றுப்பயணம்!| Dinamalar

3 வாரங்களில் 7 மாநிலங்களுக்கு அமித்ஷா சுற்றுப்பயணம்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்த 3 வாரங்களில் கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது: அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக, மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அமித் ஷா சென்றிருக்கிறார். அந்த சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, அசாம், தெலுங்கானா, கேரளா, உத்திரகண்ட், அருணாசல பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

latest tamil news

மே 9,10 தேதிகளில் அசாம் மாநிலமும், மே 14ம் தேதி தெலுங்கானாவிலும், மே 15ல் கேரளாவுக்கும் அமித் ஷா செல்ல உள்ளார். மே 20ம் தேதி உத்தரகண்ட், மே 27 மஹாராஷ்டிரா மற்றும் மே 28, 29 தேதிகளில் குஜராத்துக்கும் அமித் ஷா செல்கிறார். இங்கு அரசு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் அமித் ஷா கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments