Sunday, July 3, 2022
Homeஜோதிடம்300 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேர் வெள்ளோட்டம்; அதிர்ந்த `கோவிந்தா' கோஷம்!

300 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேர் வெள்ளோட்டம்; அதிர்ந்த `கோவிந்தா' கோஷம்!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேலன்பில் கிராமத்தில் அருள்மிகு சுந்தரவல்லித் தாயார் சமேத ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலான இது, ஆழ்வார்கள் பதின்மரில் திருமழிசை ஆழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டதும், 108 வைணவ திருத்தலங்களில் நான்காவது தலமாகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

திருத்தேர் வெள்ளோட்டம்

இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாகம் அன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்துள்ளது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் பல நூறு ஆண்டுகளாகத் திருத்தேரோட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. கல்வெட்டுகளில் கிடைத்துள்ள தகவல்களின் படி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தேரோட்டம் நடைபெற்றிருப்பதாகச் சொல்கின்றனர். திருத்தேரோட்டம் நடைபெறாததால் தேர் நிலையில் நின்றபடியே செல்லரித்துப் போய்விட்டது.

அதையடுத்து கிராம மக்கள் தேரைப் புதுப்பிக்கும் பணியில் இறங்கினர். ஊர்மக்கள் திரண்டு சுமார் 50 லட்சம் செலவில் இலுப்பை மரத்தில் 12 அடி அகலம், 27 அடி உயரம், 20 டன் எடை கொண்ட அழகிய தேரை உருவாக்கினர். தேர் தயார் செய்து இரண்டு ஆண்டுகளாகியும், கொரோனா காரணமாக வெள்ளோட்டம் விடப்படாமல் இருந்தது.

வெள்ளோட்டத்தினை வடம் பிடித்து துவக்கி வைத்த அமைச்சர்கள்

இந்நிலையில் திருத்தேரோட்டத்தின் முன்னோட்டமாக மே 24-ம் தேதி புதிய மரத்தேருக்குப் பூர்வாங்க பூஜைகள் நடந்தன. அதையடுத்து நேற்று காலை (25.5.2022) தசமி திதி ரிஷப லக்னத்தில் காலை 6 மணிக்கு மேல் இந்து சமய அறைநிலையத்துறை சார்பில் திருத்தேர் பிரதிஷ்டை மற்றும் வெள்ளோட்டம் நடைபெற்றது. வெள்ளோட்டத்தினை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வடம் பிடித்துத் தொடக்கி வைத்தனர். 300 வருடத்திற்குப் பிறகு திருத்தேர் வெள்ளோட்டம் விடப்பட்டதால் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் ‘கோவிந்தா’ கோஷத்தை விண் அதிரும் வகையில் முழங்கி, பெருமாளை தரிசித்தனர்.

இத்திருக்கோயிலில் வருகிற 4.6.2022-ம் தேதி தொடங்கி, 14.6.2022-ம் தேதி முடிய முதன் முதலாக இவ்வாண்டு முதல் பிரம்மோத்சவம் நடைபெறவுள்ளது. இந்த நாள்களில் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் திருவீதியில் வலம்வர இருக்கிறார். பிரம்மோத்சவ விழாவின் முக்கிய நிகழ்வான வருகிற 12.6.2022-ம் தேதியன்று திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments