Friday, June 17, 2022
Homeஅரசியல் செய்திகள்34 வருடங்களுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை! | Navjot Singh...

34 வருடங்களுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை! | Navjot Singh Sidhu gets one-year jail term in 1988 road rage case

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து. பாட்டியாலாவில் வசிக்கும் குர்னாம் சிங்குடன் டிசம்பர் 27, 1988 அன்று, வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக சித்துவும், அவர் நண்பர் ரூபிந்தர் சிங் சந்துவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு குர்னாம் சிங்கை அவரது காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கியதாகவும், இதில் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹரியானா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணையில் சித்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நவ்ஜோத் சிங் சித்து

நவ்ஜோத் சிங் சித்து

இந்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நவ்ஜோத் சிங் மீதான குற்றம் விசாரணையில் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், நவ்ஜோத் சிங் சித்து நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments