450 பேர் விருந்தினர்கள்; அப்பாவின் மணவிழா நடந்த இடத்தில் மகன் ரன்பீர் கபூருக்கும் திருமணம்!|Actor Ranbir Kapoor and Alia Bhatt are getting married on April 14.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் இம்மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது. ஆரம்பத்தில் திருமணம் ஏப்ரல் 17ம் தேதி என்றும் பின்னர் 16ம் தேதி என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் இது தொடர்பாக ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். இதனால் திருமணம் எப்போது என்பது குழப்பமாக இருந்தது. ஆனால் தற்போது ஆலியாபட் குடும்பத்தில் இருந்து திருமண தேதி தொடர்பான தகவல் கிடைத்திருக்கிறது. வரும் 14ம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக ஆலியா பட் உறவினர் ராபின் பட் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 13ம் தேதி திருமண சடங்குகள் தொடங்கி அன்று மருதாணி வைக்கும் நிகழ்ச்சி நடக்கும். வழக்கமாக அடுத்த நாள் மஞ்சள் வைத்தல் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெறும். மூன்றாவது நாள் திருமணம் நடைபெறும். ஆனால் 14ம் தேதி திருமணம் நடைபெறும் என்று ராபின் பட் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சிகள் 15ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரன்பீர் கபூர் - ஆலியா பட்

ரன்பீர் கபூர் – ஆலியா பட்

திருமணத்திற்கு கரண் ஜோகர், ஷாருக்கான், சஞ்சய் லீனா பன்சாலி, அகான்சா ரஞ்சன், அனுஷ்கா ரஞ்சன், ரோஹித் தவான், வருண் தவான், சோயா அக்தர், கரீஷா கபூர், கரிஷ்கா கபூர் குடும்பங்கள் என பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரன்பீர் கபூர் பெற்றோரான ரிஷி கபூர்-நீது கபூருக்கு திருமணம் நடந்த செம்பூர் ஆர்.கே.பங்களாவில்தான் ரன்பீர் கபூர் திருமணம் நடக்கிறது. ஆனால் மற்ற சடங்குகள் பாந்த்ரா இல்லத்தில் நடக்க இருக்கிறது. பாந்த்ரா இல்லத்தில் இருவரும் திருமண உறுதி மொழி எடுத்துக்கொள்ள இருப்பதாக ராபின் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு 450 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். திருமணத்திற்கு பிறகு தென்னாப்பிரிக்காவிற்கு தேனிலவு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

Your email address will not be published.