Sunday, July 3, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்aiadmk rajya sabha candidates: ராஜ்யசபா தேர்தல்: ஒரு வழியாக வேட்பாளர்களை அறிவித்த அதிமுக! -...

aiadmk rajya sabha candidates: ராஜ்யசபா தேர்தல்: ஒரு வழியாக வேட்பாளர்களை அறிவித்த அதிமுக! – rajya sabha mp election aiadmk candidates finally announced

நாடாளுமன்ற மாநிலங்களவையில் (ராஜ்யசபா) தமிழகத்தில் இருந்து விரைவில் ஆறு இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திமுக சார்பில் போட்டியிட உள்ள மூன்று வேட்பாளர்களின் பெயர்களை திமுக கடந்த சில வாரங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டது. அத்துடன் மேலும் ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு வழங்குவதாகவும் திமுக ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

ஆனால் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள இரண்டு வேட்பாளர்களை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இரண்டு எம்பி பதவிக்கு இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் கடும் போட்டி நிலவியதால் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் கட்சித் தலைமை திணறி வந்தது.

பழைய ஃபார்முக்கு வந்த சசிகலா: என்னை சேர்க்க முடியாதுன்னு சொல்ல அவங்க யாருங்க?
இந்த நிலையில் தற்போது ஒரு வழியாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோரை வேட்பாளர்களாக ஓபிஎஸ் -இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

இவர்களில் சி.வி.சண்முகம் இபிஎஸ் ஆதரவாளர் என்பதும், ஜெயக்குமாருக்கு இணையாக சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர் என்பதும், தர்மர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments