Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்Aishwarya Rajinikanth: உங்களுக்கு வேற வேலையே இல்லையா..?: ஐஸ்வர்யாவை விளாசும் நெட்டிசன்கள்..! - netizens comments...

Aishwarya Rajinikanth: உங்களுக்கு வேற வேலையே இல்லையா..?: ஐஸ்வர்யாவை விளாசும் நெட்டிசன்கள்..! – netizens comments aishwarya recent post

தனுஷுடனான பிரிவிற்கு பின்னர் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தினமும் ஏதாவது ஒரு பதிவு பகிர்ந்து டிரெண்டிங்கிலே இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிட்னஸ், உடற்பயிற்சி சம்பந்தமான விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களின் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் தன்னுடைய கெரியர் சம்பந்தமான வேளைகளில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அண்மையில் தனது ‘முசாபிர்’ ஆல்பம் பாடலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட்டில் நேரடியாக படம் ஒன்றை இயக்கவுள்ளார் ஐஸ்வர்யா.

‘தளபதி 66’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.!
மேலும், தனுஷை பிரிந்த பிறகு தன்னுடைய பிட்னஸ் குறித்த விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா. ஜிம்மில் வொர்க்கவுட், யோக பயிற்சி என பிசியாக உள்ளார். தனது உடற்பயிற்சி சம்பந்தமான, புகைப்படங்கள் வீடியோக்கள் என ஒவ்வொன்றையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.


இந்நிலையில் நேற்றைய தினம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனக்கு வந்த பிரியாணியுடன் போஸ்ட் போட்ட ஐஸ்வர்யா, இன்று போட்டோ ஷுட் என கேப்சன் கொடுத்த தனது புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரின் புகைப்படத்திற்கு வேற வேலையே இல்லையா? டெய்லி போட்டோ போட்றது மட்டும்தான் வேலையா? என கிண்டலடித்து கமெண்ட் அடித்து வருகின்றனர். வேற சிலர் ஐஸ்வர்யா புதிய போட்டோவில் செம ஸ்டைலாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments