மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இருப்பினும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்றும் தகவல்கள் வந்தன.
இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக அஜித், போனி கபூர் மற்றும் வினோத் இணைந்த படமான AK61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படத்திற்காக அஜித் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஒரு மாஸான தகவல் AK61 படத்தைப்பற்றி வெளியாகிவுள்ளது .என்னவென்றால் AK 61 படத்திற்காக மிகப்பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 9 ஏக்கரில் அந்த செட் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை அஜித் படங்களில் போடப்பட்ட பிரமாண்டமான செட் இதுவாகும். மேலும் இந்த செட்டிலேயே பாதி படம் படமாக்கப்படவுள்ளதாம்.தற்போது மற்ற மொழி படங்களான RRR ,KGF போன்ற படங்கள் பிரம்மாண்டத்தில் அடுத்தகட்டத்துக்கு செல்ல அஜித்தின் AK61 படம் அதற்கு நிகரான பிரம்மாண்டத்தில் உருவாகவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.